Ads Area

சவுதி அரேபியாவில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் பல நகரங்களில் அமுலில் இருந்த 24 மணி நேர ஊரடங்குச் சட்டம் இன்று முதல் (2020-04-26) மக்கா நகரத்தைத் தவிர ஏனைய நகரங்களில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது, மக்காவில் தொடர்ந்தும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் அறிவிக்கப்படுவதாவது,

சவுதி அரேபிய மன்னரும், புனித மக்கா மதினா நகரங்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் அவர்கள் நோன்பு காலத்தில் மக்களின் நன்மை கருதி, சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய ஊரடங்கு உத்தரவினை தளர்த்தும் படி உத்தரவிட்டுள்ளார். 

தற்போது பொதுமக்கள் தங்களது அத்தியாவசித் தேவைகளுக்காக காலை 9 மணி முதல் பகல் 5 மணி வரை எங்கும் வெளியில் செல்ல முடியும் எனவும், அவசிய வர்த்தக நிலையங்கள் மற்றும ்தனியார் நிறுவனங்கள் இயங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் ஊரடங்கு உத்தரவு தளர்வு இன்று (2020-04-26) முதல் எதிர்வரும் மே 13ம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்படுத்த சவுதி அரேபியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் கடந்த பல வாரங்களாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe