Ads Area

நாவிதன்வெளி பிரதேச சபையினால் வீடுகள் பொது நிறுவனங்க.ள் பள்ளிவாசல்களில் தொற்று நீக்கி தெளிப்பு

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு நாவிதன்வெளி பிரதேச சபை பகுதிகளில்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

வெள்ளிக்கிழமை(24)  மாலை 6 மணியளவில்  நாவிதன்வெளி பிரதேச சபை  பிரிவிற்குட்பட்ட  உகண வீரகோட வீதிகளில்  உள்ள பொதுமக்களின் வீடுகள், பொது நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், சந்தைகள்  ,என்பன  நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் தலைமையில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது .

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் நாவிதன்வெளி பிரதேச சபையும் இணைந்து இராணுவத்தின் உதவியுடன் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதனின் வழிகாட்டலில்   குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதே வேளை  மத்தியமுகாம்  தொழிற்பயிற்சி நிலையம் எதிர்வரும் காலங்களில் செயற்படுத்துவதற்காக   சுத்தம் செய்யும் செயற்பாடு இராணுவத்தினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்து.இதனை அவ்விடத்திற்கு சென்று பதில் தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட் பார்வையிட்டதுடன் தற்போது காபட் வீதியாக புனரமைக்கப்படும் அம்பாறை வீரகொடை வீதியையும் சென்று அவதானித்துள்ளார்.

குறித்த வீதி சுமார் 18 கிலோமீற்றர் தூரம் வரை தனியார் நிறுவனம் ஒன்றினால் காபர்ட் இடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் பணிப்புரைக்கமைய நாவிதன்வெளி  பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை   மூடப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கள் சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்களின் ஊடாக பரவலாம் எனும் அச்சத்தின் காரணமாக பொது மக்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe