Ads Area

ரூ 10 கோடி நஷ்ட ஈடு, அவதூறு பரப்பிய ஊடங்களுக்கு மவ்லானா சஜ்ஜாத் நோமானி நோட்டீஸ்!

புதுடெல்லி (19 ஏப் 2020): தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக ரூ 10 கோடி நஷ்டஈடு கேட்டு மவ்லானா சஜ்ஜாத் நோமானி ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்..!

சீனாவில் தொடங்கி உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக ஊடகங்கள் மட்டுமல்லாமல் அரசும் வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கின..!

மேலும் இதுதான் தருணம் என காத்திருந்த பாசிஸ்டு ஆதரவு மீடியாக்கள் பல வீடியோக்களையும் மார்பிங் மூலம் செட்டப் செய்து பரப்பி, மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன..!

அதில் ஒன்று தப்லீக் ஜமாத்தின் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தலைவர் என்பதாக முஸ்லிம் மத குருவும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முன்னாள் செய்தி தொடர்பாளருமான மவ்லானா சஜ்ஜாத் நோமானி குறித்து ஊடகங்கள் அவதூறு பரப்பின. மேலும் பல பொய்யான வீடியோக்களையும் அவர் மீது குற்றம் சாட்டி ஊடகங்கள் வெளியிட்டன..!

இந்நிலையில் தன் மீது அவதூறு பரப்பியதற்காகவும், தன் மீதான மரியாதையை சீர் குலைத்ததாகவும் கூறி ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு பொய் தகவல் பரப்பிய ஊடகங்களுக்கு மவ்லானா சஜ்ஜாத் நோமானி தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளர். மேலும் அவதூறு பரப்பிய ஊடகங்கள் அனைத்தும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe