கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம். அது இந்தியாவிற்க்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், என்று இந்தியா டுடே பேட்டியில் மீடியாக்கள் மற்றும் சில குழுக்களை கடுமையாக சாடியுள்ளார் இஸ்ரேலிய பேராசியர் யூவல் ஹரரி.
பேராசிரியர் அவர்கள் யூதர் என்பதால் முஸ்லீம்களை திட்டுவார் என நினைத்திருப்பார் போல. ஆனால் ராகுல் கன்வால் எதிர்பார்த்ததற்க்கு மாற்றமாக முஸ்லீம்கள் மீது பழிபோடுபவர்களை மிக கடுமையாக விமர்சித்தார் பேராசிரியர். கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது என்பது கடைந்தெடுத்த முட்டாள் தனம் (complete non-sense), இது மிகவும் ஆபத்தானது.
மத வெறுப்பு பிரசாரங்களால் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இன்னும் அதிகமாகும், அது இந்தியாவிற்க்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க மீடியாக்கள் மற்றும் சில குழுக்களின் மத வெறுப்பு பிரச்சாரம் உதவுகின்றன என்பதை மறைமுகாமாக சுட்டி காட்டியுள்ளார் பேராசியர் யூவல் நோவா ஹரரி.