Ads Area

பேஸ்புக் பைத்தியம் என்று சொல்வார்களே..!! உண்மையில் நீங்கள் பேஸ்புக் பைத்தியமா..? சுய விசாரனை செய்து கொள்ளுங்கள்.

இன்று ஸ்மார்ட் போன்களும் சமூக வலைத்தளங்களும் இளைஞர்கள் மத்தியில் பின்னிப்பிணைந்த ஒன்றாக மாறிவிட்டது.

Facebook போன்ற Social Media க்களின் வருகை தொலைதூரத்தில் உள்ள நட்புகளை, தெரியாதவர்களை இணைத்துக் கொண்டு கருத்துக்களை பரிமாற உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் இதற்கு அடிமையாதல் பல தீமைகளை விளைவிக்கிறது.

Facebook ஆனது நாள்தோறும் 1.13 billion பயனர்களை கையாள்கிறது.
Facebook நிறுவனர் Mark Zuckerberg இன் கருத்துப்படி ஒருவர் 50 நிமிடங்களை நாள்தோறும் Social Media களில் செலவிடுகிறார்.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாதல் என்றால் என்ன? (What is Social Media Addiction? )

இலகு மொழியில் சொல்வதானால் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது எனலாம். WHO வினால் Games களை அடிக்கடி விளையாடுவது , அதற்கு அடிமையாதலை Gaming Disorder என்று வகைப்படுத்தினாலும் , சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாதலை நோயாக இனம்காண்பது இன்னும் விவாதத்தில் உள்ளது.

வெறுமனே Social Media வில் செலவிடும் நேரத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு அடிமையாதல் என்று சொல்ல முடியாது. செய்தி, தகவல்களை படித்தல், சமூக விழிப்பூட்டல் தகவல்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் அடிமையாதல் என்று கொள்ளமுடியாது.

ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை இடும் போது அதற்கு கிடைக்கும் Like மற்றும் Share களால் மூளை கலங்களில் Dopamine எனும் ஹோர்மோன் சுரக்கப்படுகிறது. இது மனசுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் வழங்குகிறது. நாளடைவில் இதுவே அடிமையாக்கவும் செய்கிறது.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவதற்குரிய அறிகுறிகள் எவை? (Signs & Symptoms)

நேரடியான வரையறுக்கப்பட்ட அறிகுறிகள் இல்லாவிடினும் பல ஆய்வுகளின் தொகுப்பாக பின்வருவனவற்றை கூறலாம்.

01. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சோசியல் மீடியா Updates ஐ பார்ப்பது. காலங்காத்தாலேயே புதிதாக என்ன தகவல்கள் வந்துள்ளது என்பதை தேடுவது.

02. பிரயோசனம் இல்லாத, முட்டாள் தனமான தகவல்களை பார்ப்பதிலும் அவற்றுக்கு கருத்து இடுவதிலும் அதிக நேரத்தை செலவழித்தல்.

03. போகின்ற இடங்களிலெல்லாம் (Checked in) தின்கின்ற விடயங்களை எல்லாம் பதிவிடுதல். விடுமுறைக்கு தூர இடங்களுக்கு செல்வதை பதிவிடுவது வேறு; தினந்தோறும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் பதிவிடுவது வேறு.

04. Notifications ஐ அடிக்கடி சோதித்தல். சிலர் ஏதாவது பதிவுகளை இட்டு விட்டு அதற்கு Like, Shares Comments எத்தனை வருகிறது என நிமிடத்துக்கு நிமிடம் சோதிக்கின்றனர். இது அடிமையாதலின் பாரதூரமான விடயம்.

05. நண்பர்களையும் உறவினர்களையும் சமூக வலைதளங்களின் ஊடாகவே தொடர்பு கொள்ளல். இதன் மூலம் நேரடி தொடர்புகளை தவிர்ந்து கொள்ளல். இது ஆளுமை விருத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

06. ஒரு Post க்கு கிடைக்கும் Like, Share களை அடிக்கடி சோதித்தல். அதில் குறைவு ஏட்படும்போது மன உளைச்சல்களை கொண்டு வரும்.

07. Internet Connection க்காக தவித்தல் (Craving): Internet இல்லாவிட்டாலும் மெதுவாக இருந்தாலும் மன உளைச்சல், கோபத்துக்கு ஆளாகி அருகிலுள்ளவர்களிடம் வெளிப்படுத்தல்.

08. காண்பவற்றை எல்லாம் புகைப்படம் எடுத்து பதிவு இடல்: விபத்துகள், விளையாட்டுகள், உண்ணும் உணவுகள், Selfie என அடிக்கடி தாறுமாறாக பதிவிடல். அதற்கான Likes களுக்கு ஏங்குதல்.

09. சமூக வலைத்தளங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிடல்: குடும்பம், பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமாக மாறுதல். அதற்கு அடிமையாகி தனது பொறுப்புகளில் கரிசனை காட்டாதிருத்தல்.

10. எப்பொழுதெல்லாம் ஓய்வு கிடைக்கின்றதோ முதல் வேலையாக சமூக வலைத் தளத்தை பார்வையிடல். தன்னை அறியாமலே தனது சூழலில் இருந்து அந்நியமாக்கும்.

சமூக வலைதளங்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் உடல் உள பாதிப்புகள்:

01. திருப்தி இன்மை மற்றும் சந்தோஷமின்மை. 

பல ஆய்வுகளின்படி சமூக வலைகளில் அதிக நேரத்தை செலவு செய்வதால் ஏனையவர்களுடன் நேரடியான உடலியல் தொடர்பு அற்றுப் போகிறது. இதனால் தனிமை உணர்வு மேலோங்கும்.

02. பொறாமையை வளர்க்கும்: 

அடுத்தவர்கள் தமது பெருமை, பயணங்கள் போன்றவற்றை பதிவிடுவதால் அவைகளைப்போன்ற வாழ்க்கை அமையவில்லை , மற்றவருக்கு கிடைக்கும் Likes தனக்கு கிடைக்கவில்லை என்ற மன உளைச்சல் அதிகரிக்கும். இதனால் Depression ஏற்படலாம்.

03. பய உணர்வை அதிகரித்து உடல்நலனைப் பாதிக்கும்:

ஒருவருக்கு ஓய்வு நேரத்தில் சமூக வலைத் தளத்துக்கு செல்ல முடியாத நிலை வரும்போது கவலை, பய உணர்வு ஏற்படும். பல ஆய்வுகளில் இது நிரூபணமாகியுள்ளது. Behavior of Craving

04. சமூக வலைத்தளங்கள் உங்களை கட்டுப்படுத்த ஆரம்பிக்கும்:

பலர் தாம் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவதை உணராமலேயே கடந்து செல்கின்றனர். கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாமல் போவதற்கும் இது காரணமாகிறது.

05. தற்கொலைன்னு  துாண்டல்.

Cyber-bullying எனும் இணையத்தினூடான மிரட்டல், அவமானப்படுத்தல், ஒருவரின் கருத்துக்கு கீழ்த்தரமான பின்னூட்டமிடல் என்பவை மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரை கொண்டு சென்றுள்ளது.

06. கவனச் சிதைவு மற்றும் செயல்திறனை குறைத்தல்:

கல்வி நடவடிக்கைகளாகட்டும் புதிய கண்டுபிடிப்புகளாகட்டும் அவற்றில் இருந்து ஒருவரின் கவனத்தை சிதறடிபதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

07. மன அழுத்தம், சோர்வு ஏற்படல்: 

அதிக நேரங்களை சமூக வலைகளில் செலவு செய்வதால் நாளாந்த செயற்பாடுகளில் இருந்து விலகுகிறோம். அதிக தகவல்கள் அவற்றைப் பற்றிய சிந்தனை மூளை கலங்களை களைப்படையச் செய்யும். அதிக Will power & Energy செலவு ஆவதால் உளச் சோர்வு ஏற்படும்.

08. தன்னை தனித்தன்மையோடு காண்பிக்க முயற்சித்தல்.

(Peer Pressure & The Desire to Compare) இது பொதுவான மனித இயல்பாக இருந்தாலும், மன அழுத்தத்தை அதிகரிக்க காரணமாகிறது. ஒரு செய்தியை தானே முதலில் பதிவிட வேண்டும், தனது பதிவு, தனது பெயர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நேரங்களை வீணடித்து மன உளைச்சலுக்கு ஆளாதல்.

09. ஏனைய உடலியல் பாதிப்புகள்:

அதிக நேரம் Phone பார்ப்பதால் தலைவலி, கண்கள் சோர்வடைதல்.
களுத்து வலி, முதுகு வலி , Carpal Tunnel Syndrome எனும் மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் வலி அதனுடன் சேர்ந்த விரல் நோவு. இரவில் தூக்கமின்மை போன்ற பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமூகவலைத்தள அடிமையாதலில் இருந்து விடுபடுவது எப்படி?

01. Notifications அடிக்கடி பார்ப்பதை தவிர்த்தல்:

Mobile phone அடிக்கடி Notification தோன்றுவதால் எம்மை வலைத் தளத்துக்கு இழுத்துச் செல்கிறது. முதல் வேலையாக Notifications ஐ Turn Off செய்துவிட்டு அதனை அடிக்கடி பார்ப்பதை தவிர்த்தல்.

02. சமூக வலைத்தளங்களில் செலவு செய்யும் நேரத்தை குறைத்தல்:

தமக்கு வசதியான குறிப்பிட்ட ஒரு நேரத்தை மாத்திரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மாத்திரம் வலைத்தளங்களுக்கு செல்வது சிறப்பு.

03. Facebook App ஐ Phone இருந்து அழித்துவிடல்.

App மூலம் இலகுவாக செல்ல முடிவதால் அடிக்கடி நம்மை இழுத்துச் செல்கிறது. அதனை அழித்து விட்டு Chrome போன்ற Browser ஊடாக நாம் விரும்பிய நேரத்துக்கு செல்வது, அது நம்மை அடிமை ஆக்குவதை தவிர்க்கும்.

04. ஓய்வான நேரங்களை பிரயோசனமான வேலைகளில் செலவழித்தல்:

உடற்பயிற்சி, வீட்டுத் தோட்டங்கள், பிள்ளைகளுடன் விளையாடுதல் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தல், நண்பர்களை நேரில் சந்தித்தல் போன்ற பல வழிகள் உண்டு.

05. தேவையில்லாத நண்பர்களை நீக்குதல் or Block பண்ணுதல்:

அடிக்கடி Tag பண்ணி கொண்டு, தமது பதிவுகளுக்கு பொருத்தமில்லாத பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டு இருப்பவர்களையும், முட்டாள்தனமான பதிவுகளை இருப்பவர்களை நீக்குவதால் மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

06. தூங்கும் போது அல்லது படுக்கை அறையில் Smart Phone பாவித்தலை தவிர்த்தல்:

இது மிகவும் கடினமான வேலையாக இருந்தாலும் உங்களை அடிமையாவதில் இருந்து பாரியளவு மீட்கும்.

07. சரியான வாழ்க்கைத் துணையை அமைத்துக்கொள்ளல்:

ஒருவர் தன்னை அறியாமல் மூழ்கிக் கிடக்கும் போது அவரை கட்டுப்படுத்தக்கூடிய பெற்றோர் அல்லது துணை இருப்பது அடிமையாதலில் இருந்து மீட்கும்.

Take Home Message:

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு."
நவீன தொழில்நுட்பங்கள் மனிதனின் தேவையை இலகுவாகவே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வகையில் சமூக வலைத்தளங்களும் பல நன்மைகளை கொண்டு வருகின்றன.

இருந்த போதிலும் அவற்றில் அதிக நேரத்தை செலவழித்து நிஜ உலகத்தில் இருந்து நிழல் உலகத்திற்கு செல்வது தன்னை அதற்கு அடிமையாக்கி விடும்.

சமூக வலைத்தளங்களை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் அவை நம்மை கட்டுப்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்.

இன்று இளம் சமுதாயம் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சமூக வலைகளில் மூழ்குவதால் உடற்பயிற்சியின்மை , உள அழுத்தம் போன்றவற்றிற்கு உள்ளாகி தொற்றா நோய்களுக்கு இளவயதிலேயே ஆளாகும் ஆபத்து உள்ளது.


நீதி:-

எல்லாஞ் சரி Facebook பாவிக்க வேண்டாம் என்று Facebook இலேயே சொல்லுறீங்களே? என்னடா செய்றது மாப்பு: "புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை சிகரெட் பெட்டியிலதான் போட வேண்டியிருக்கு."

இந்த பதிவை வாசித்தபின் நான் Facebook வரல; இதை வாசிக்கல; என காண்பிக்க Like , Share பண்ணாமல் இருந்துவிட வேண்டாம். அப்புறம் நான் மன உளைச்சலுக்கு ஆளாவேன்.

உண்மையான தமிழ் தெரிஞ்சவனா இருந்தா அடுத்தவனுக்கும் Share பண்ணுவான். அடிமையாகி இருப்பவனை Tag பண்ணுவான்.

By: Dr Ziyad Aia


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe