Ads Area

அம்பாரை சேனாநாயக்க கல்லூரி மாணவனால் தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரம் கண்டுபிடிப்பு.

பாறுக் ஷிஹான்

அம்பாரை சேனாநாயக்க கல்லூரி மாணவனால் தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரம் கண்டுபிடிப்பு

அம்பாரையைச் சேர்நத புனுவினுர குமாரசிங்க (19) என்ற பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் அம்பாரை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டள்ளது.

இந்த இயந்திரம் இன்றைய தினம் புதன்கிழமை (22) அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிடம் அவரது காரியாலயத்தில் வைத்து செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டதுடன், அவரிடம் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

அம்பாரை டி.எஸ்.சேனாயநாயக்க கல்லூரியில் உயர்தரம் தொழில்நுட்பப்பிரிவில் கல்வி கற்று கடந்த வருடம் உயர்தரப்பரீட்சை எழுதி பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கிறார்.

இந்த இயந்திரத்தினை அலுவலகங்கள், வங்கிகள் போன்ற மக்கள் பாவனையுள்ள இடங்களில் பொருத்திப் பயன்படுத்த முடியும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe