Ads Area

சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் துப்பாக்கிச் சூடு, சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைது.

( பாறுக் ஷிஹான்)

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினையின்போது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை (20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தவலுக்கமைய கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தனவின் கட்டளைக்கமைய விசாரகைணை முன்னெடுக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அயாஷ கருணாரத்தினவின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தரவின் நேரடிக் கண்காணிப்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் இன்று (21) 26 வயதுடைய சந்தேக நபரையும் அவரிடமிருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தின்போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் சந்தேக நபரை நாளை புதன்கிழமை (22) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe