Ads Area

12ஆம் கொளனி, 3ம்வட்டாரம் மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு

(எம்.எம்.ஜபீர்)

12ஆம் கொளனி, சாளம்பைக்கேணி-04, 3ம் வட்டாரம் மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சாளம்பைக்கேணி-04 கிராமசேவகர் பிரிலுள்ள சகல குடும்பங்பகளும் அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் நேற்று  வழங்கி வைக்கப்பட்டன.

மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.அம்ஜாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.எம்.விஜயசிங்க, நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

இவ்உலர் உணவு பொதிகள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக்(ஜவாத்) அவர்களின் அணுசரணையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe