Ads Area

நாவிதன்வெளி பிரதேச சபைக்குள் நடப்பது என்ன?

பாறுக் ஷிஹான்

நாவிதன்வெளி பிரதேச சபை திடிரென பூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு பாவனையில் உள்ள வாகனங்கள் எதுவித பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. திங்கட்கிழமை (27) குறித்த பிரதேச சபைக்கு சென்ற ஊடகவியலாளர்கள் அச்சபை மூடப்பட்டிருந்தமை குறித்த சபை செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக வினவினர்.

குறித்த சபை செயலாளர் இன்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதனால் தான் ஏலவே சபைக்கு வந்து சென்றதாக குறிப்பிட்டதுடன் சபையில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் என்பதனால் கடமைக்கு வரவில்லை என குறிப்பிட்டார்.

அத்துடன் அத்தியவசிய சேவைகளான குடிதண்ணீர் விநியோகம் திண்மக்குப்பைகளை அகற்ற ஊழியர்கள் கடமையாற்றுவதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு இருந்த போதிலும் சபை பூட்டப்பட்டுள்ள நிலைமை அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் ஊடகவியலாளர்களை அழைத்து குறித்த சபையை தான் பொறுப்பேற்ற காலம் இருந்து சபை செயலாளர் ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் இங்குள்ள அரச உத்தியோகத்தர்கள் எவரும் சீராக கடமைக்கு சமூகமளிப்பதில்லை என்ற விடயத்தை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு கொண்டு வந்துள்ளார்.

அத்துடன் சபை நடவடிக்கை குறித்து பிரஸ்தாபித்த அவர் சபை சூழல் அசுத்தமாக உள்ளதை ஊடகவியலாளர் குழுவை அழைத்து சென்று காண்பித்தார்.

மேலும் சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் ஏனைய வாகனங்கள் யாவும் பராமரிப்பின்றி வெயிலில் காணப்படுவதுடன் தளபாடங்களும் சிதறி காணப்படுகின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe