கத்தாரில் ஷாப்பிங் செய்வதற்கு, சேவைத்துறையில் பணிபுரியும் நபர்கள், கட்டுமானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் போன்றவர்கள் பேஸ் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேஸ் மாஸ்க் அணியாமல் எவரும் சூப்பர்மார்க்கட்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த தீர்மானமானது ஏப்ரல் 26 முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்.
இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கு 3 வருட சிறை மற்றும் 200,000 ரியால் அபராதம் அல்லது இதில் ஏதாவது ஒன்று தண்டனையாக வழங்கப்படும் என்றும் கத்தார் அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது.
கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 7764 ஆக அதிகரித்துள்ளது மேலும் இது வரை 10 பேர் மரணடைந்துள்ளார்கள் என்பதுடன், 750 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.