தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1141 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். தற்போது மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,772 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5 புதிய கொரோனா தொற்று மரணங்களும் இன்று பதிவாகியுள்ளது இவர்களோடு சேர்த்து இதுவரை சவுதி அரேபியாவில் 114 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது இனங் காணப்பட்ட 1,122 புதிய தொற்றாளர்களில் அதிகமானோர் மக்கா, மதீனா, றியாத் மற்றும் ஜித்தா நகரைச் சேர்ந்தவர்களாவர். மக்காவில் மட்டும் 305 பேர் இனங் காணப்பட்டுள்ளனர், மதீனாவில் 299 பேரும், ஜித்தாவில் 171 பேரும், றியாத்தில் 148 பேரும் இனங் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை அங்கு 1,812. பேர் வரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
Saudi-Arabia reports 5 new deaths due to corona-virus, raising the death toll to 114. 172 new corona-virus recoveries, bringing the total to 1,812. also Saudi-Arabia announces 1,141 new corona-virus cases, bringing the total number of cases in the kingdom to 12,772.