Ads Area

இஸ்லாமிய வெறுப்புக் கருத்துக்களுக்கு சவுதி இளவரசியும் கடும் கண்டனம்.

சம்மாந்துறை அன்சார்.

இந்திய RSS இந்துத்துவவாதிகளின் மற்றும் தீவிர போக்குக் கொண்ட BJB கட்சியின் அரசியல்வாதிகள் போன்றோரால் முன்வைக்கப்படும்  இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகளுக்கு அரபு உலகில் பலத்த கன்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் சவுதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியும் Saudi Fashion Week and Saudi Fashion Community யின் நிறுவனருமான இளவரசி நுாரா மின் பைசலும் - Princess Noura bint Faisal தனது பலத்த கன்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு தனது கன்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

சவூதி அரேபியாவில் 4 மில்லியன் இந்தியர்கள் பணிப்புரிகிறார்கள். அவர்கள் இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக நம்புகிறேன். அவர்களில் யாராவது இஸ்லாத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டால் அபராதத்துடன் நாடு கடத்தப்படுவார்கள். நாங்கள் ஒரு போதும் இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 

இந்திய அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் தேஜஸ்வி சூர்யா என்பர் அரபு நாடுகளின் பெண்களைப் பற்றி மிகவும் அருவருப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரை இந்தியப் பிரதமர் மோடி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

டுபாய் இளவரசி மற்றும் ஓமான் நாட்டு இளவரசி போன்றோரும் இந்தியர்களின் இஸ்லாமிய விரோத கருத்துக்களுக்காக கண்டனங்கள் தெரிவித்திருந்த வேளையில் சவுதி இளவரசியும் தற்போது தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe