தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,122 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். தற்போது மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,484 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6 புதிய கொரோனா தொற்று மரணங்களும் இன்று பதிவாகியுள்ளது இவர்களோடு சேர்த்து இதுவரை சவுதி அரேபியாவில் 103 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது இனங் காணப்பட்ட 1,122 புதிய தொற்றாளர்களில் அதிகமானோர் மக்கா, மதீனா, றியாத் மற்றும் ஜித்தா நகரைச் சேர்ந்தவர்களாவர். மக்காவில் மட்டும் 402 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.
சவுதியில் 50 வீதமான கொரோனா தொற்றாளர்கள் சனநெரிசல் மிக்க குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள் பகுதிகளிலிருந்தே அடையாளம் காணப்படுவதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.