Ads Area

யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பிய சம்மாந்துறை நபருக்கு கொரோனா தொற்று இல்லை.

பாறுக் ஷிஹான்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை சம்மாந்துறை பகுதி பிரதேசவாசி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பாக வெளிவந்த வதந்தி தொடர்பாக திங்கட்கிழமை(20) மாலை கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து முப்பது நாட்களுக்கு முன் வீடு திரும்பியிருந்தார். குறித்த நபருக்கு தொண்டைவலி சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி இருந்தோம்.

அதன் பின்னர் அங்கிருந்து அவரில் இருந்து சில கூறுகளை பெற்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு ஆய்வு செய்ய அனுப்பினோம்.எனினும் குறித்த நபருக்கு எவ்விதமான கொவிட் தொற்று இல்லை என நெகடிவ் என ஆய்வறிக்கைகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.எனவே சம்மாந்துறை பகுதி மக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம்.அத்துடன் சமூக ஊடகங்களை பாரிய பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை எமக்கு வழங்க வேண்டும்.

தற்போது மிக வேகமாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் மக்களைச் சென்றடைவதை தடுப்பதற்கு உதவ வேண்டும். ஒரு நபர் தொடர்பாக தற்போது வெளிவந்துள்ள சரியான செய்தியை குறித்த இணையதளம் அல்லது சமூக ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவிக்க விரும்புகின்றேன். என்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe