Ads Area

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் மதிப்பளிக்கவும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்யும் சந்தர்ப்பங்களில் தொற்றுக்குள்ளானவர்களின் வதிவிடங்களை பதிவு செய்து அவற்றை கான்பிக்கும்போது அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் பாதுகாப்பு அமைச்சு நேற்று (27) திங்கட்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.  
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் சுகாதார வழிமுறை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவது தொடர்பான காட்சிகளை சில தொலைக்காட்சி அலைவரிசைகள் செய்தி ஒளிபரப்பு செய்வதும ஏனைய நிகழ்ச்சிகளில் காண்பிப்பதும், பத்திரிகைகளில் செய்திகள் மற்றும் கட்டுரைகள் பிரசுரிப்பதும் நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டும்  வகையில்  ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகளை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன மேலும் குறிப்பிடுகையில்,
"இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களின் தனிப்பட்ட விடயங்களை பாதுகாத்து மதிப்பளித்து செயற்படும் பட்சத்தில் அவர்கள் பரிசோதனைக்கு சுயமாக முன்வருவதை ஊக்கமளிப்பதாக அமையும்.
இதுபோன்ற நிகழ்வுகளை பதிவு செய்தல் அல்லது ஒளிபரப்பு செய்வதானது கடமையில் ஈடுப்படும் சுகாதார அதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையலாம். 
எனவே, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளின் போதோ அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளின் போதோ சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து செல்வதையும் ஒளிப்பதிவு செய்வதையும் தவிர்ந்துகொள்ளுமாறும் தொற்றுக்குள்ளானவர்களின் தனிப்பட்ட கௌரத்திற்கு மதிப்பளித்து செயற்டும் வகையில் ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் படியும்" ஊடக நிறுவனங்களிடம் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (vidiyal)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe