Ads Area

SWDC அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட Covid 19 கூட்டு நிவாரணப்பணி- கட்டம் 2

கொறோனா நோய்த்தொற்றால் வருமானம் இழந்து வீடுகளுக்குள் முடங்கி  இருக்கின்ற குடும்பங்களுகான இரண்டாம் கட்ட உலர்உணவு வழங்கும் வைபவம் நேற்று (22/04/2020) SWDC காரியாலயத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் 200 குடும்பங்களுக்கான  நிவாரண பொதிகள் ச.துறை நம்பிக்கை யாளர் சபையிடம்  வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வானது SWDC இன் தவிசாளர் திரு A.L ஜௌபர் சாதிக் அவர்களின் தலைமையில்   சம்மாந்துறை மஜ்லிஷ் அஷ்ஷூராவின் கௌரவ அமீரின் பங்குபற்றுதலுடன் நம்பிக்கையாளர் சபை யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் SWDC இன் உப தவிசாளர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா உற்பட பல உயர்சபை உறுப்பினர்களும் சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அல்லாஹ் எமது முயற்சிகளை ஏற்றுக்கொள்வானாக! இதற்காக பண உதவி புரிந்த அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக! ஆமீன்.

 SWDC ஊடகப் பிரிவு.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe