ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் வாழ்வாதாரம் இன்றி சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (16) இடம்பெற்றது.
தனது ஊர் மக்களுக்காக தனது அங்கத்துவ உறுப்பினர்களினதும், பிரமுகர்களின் உதவிகளையும் கொண்டு இத் திட்டம் நடைமுறை செய்யப்பட்டது.
மேலும் 2015 O/L Batch Foundation என்பது சம்மாந்துறையில் சமூக சேவைகள் செய்து வரும் பாரிய இளைஞர் அமைப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.