(பாறுக் ஷிஹான்)
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர், அவர்களால் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் மாந்தோட்டை என்னும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருப்பதாக இன்று சனிக்கிழமை (16) சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
கைதான குறித்த சந்தேக நபரிடம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது ஹெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவே தானும் மற்றுமொரு சந்தேக நபரான 20 வயதான நபரும் நிந்தவூர் 9 பகுதியில் உள்ள அஹதியா பாலர் பாடசாலை ஒன்றில் கடந்த 6 ஆம் திகதி மின்விசிறிகள் மூன்றை திருடி விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 20 வயதான மற்றையவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.