Ads Area

கத்தாரில் இதுவரை 35 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று!

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 350 இற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதிகமான நோயாளிகள் ஐக்கிய அரபு எமிரகத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 200 க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கத்தாரில் 35 பேரும், சவுதி அரேபியாவில் 12 பேரும், ஏனையவர்கள் ஏனைய நாடுகளிலும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, டுபாயில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை விடவும் அதிகமான இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனவும் பலர் தகவல் வழங்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் வெளிளநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்து கொடுத்த இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளுக்கும், குறித்த இலங்கையர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

(Tamilwin)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe