கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மகன் ஸலா கஷோகி , தனது தந்தையை கொன்ற கொலையாளிகளை மன்னிப்பதாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சவுதியைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரனா ஜமால் கஷோகி துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் 2018 அக்டோபரில் கொல்லப்பட்டார்.
இவரது படு பயங்கர கொலை தொடர்பில் சவுதியில் ரகசிய விசாரணையின் பின்னர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதில் பங்கு வகித்ததற்காக ஐந்து பேருக்கு 2019 டிசம்பரில் சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது மேலும் கஷோகியின் கொலையோடு சம்பந்தப்பட்ட 3 பேருக்கு 24 வருட சிறைத்தண்டனையும் விதித்திருந்தது.
மேலும் தனது தந்தையின் கொலையினை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் தந்தையின் கொலை தொடர்பில் சவுதி அரசின் விசாரனைகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.
இந் நிலையில் தற்போது கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மகன் ஸலா கஷோகி, இந்த புனித மிகு ரமலான் மாதத்தில் தனது தந்தையை கொலை செய்தவர்களை மன்னிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.