முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காது புதைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. அத்துடன் சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் குரல் கொடுப்பதற்காக எம்.பி பதவி கிடைக்காமல் போகுமாக இருந்தால் அதற்காக சிறிதும் கவலைப்பட மாட்டேன் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினருமான அலி சப்ரி குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அத்துடன் உலக நாடு களில் கொரோனாவினால் இறப்பவர்களை புதைக்க அனுமதிக்கையில் இலங் கையில் அதற்கு மறுப்பதாக இருந்தால் அது விஞ்ஞா னபூர்வமாகவோ மருத்துவ ரீதியாகவோ உறுதிப்படுத் தப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
புதைப்பதற்கு இலங்கையில் அனுமதி வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை .நான் புதிதாக எதுவும் கூறவில்லை. இந்த நிலையிலே இனவாதிகள் சிலர் இதனை பூதாகரமாக்க முயல்கின்றனர்.
அதனை வேறு தரப்பினருக்கு செய்ய முடியாது.சிலர் ஜனநாயக வழியில் வழக்கு தொடுத்துள்ளனர். வேறு சிலர் ராஜதந்திர மட்டத்தில் தீர்க்க முயல்கிறார்கள்.எமது உரிமைகளுக்காக போராடுவதில் எந்ததடையும் கிடையாது.
Madawala News