Ads Area

அபுதாபியிலுள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்கு கொரோனா! தூதரகத்திற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

தூதரகத்தின் சில ஊழியர்கள் கொவிட்-19 நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தூதரகம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் வசிக்கும் இலங்கை மக்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, தூதரகம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் அப்பதிவில், தூதரகத்தினை slemb.abudhabi@mfa.gov.lk என்ற மினனஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி இலக்கம் 800 119 119 ஊடாகவோ தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Qatar Tamil)

செய்தி மூலம் - http://www.dailynews.lk


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe