சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக ஹிஜ்றா மீன் சந்தை புனர்நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டம் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.அப்துல் றஸாக் அவர்களின் மேற்பார்வையில் சந்தையின் கூரை மழை காலங்களில் நீர் வடிந்தோட முடியாமல் நீர் தடைப்படுகின்றமை சீர் செய்யப்பட்டதுடன் சந்தையின் ஏனைய சிறிய திருத்த வேலைகள் செய்யப்பட்டு மீன் சந்தைக்கு வர்ணம் பூசப்பட்டது.