அரபு நாடுகளிலேயே வசித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களை தொடர்ந்து செய்துவரும் காரணத்தால் அரபு நாடுகளில் பல்வேறு பாசிஸ்டுகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ள நிலையில், தற்போது கனடாவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாமிய வெறுப்பை கக்கிய ஒருவர் வேலை இழந்துள்ளார்.
ரம்ஜான் மாதத்தை ஒட்டி டொரன்டோ நகராட்சிக்குட்பட்ட பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பை ஒலிபெருக்கிகள் மூலம் செய்வதற்கு உள்ளூர் நகராட்சி அனுமதி வழங்கியது.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மதவெறி பிடித்த ரவி மிகவும் மோசமாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
இந்தியா போலல்லாமல் வெறுப்பு பேச்சுகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கும் நாடுகளில் ஒன்றாக அறியப்படும் கனடாவில் இவ்வாறு மோசமாக பேசப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து பிராம்ப்டனில் உள்ள பீல் மாவட்ட பள்ளி வாரியம், ஹூடாவை ‘பள்ளி கவுன்சில் தலைவர்’ பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், அவருக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாகவும் அறிவித்தது.
பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுனும் ரவி ஹூடாவின் வெறுப்பு கருத்துக்களை கண்டித்தார். இஸ்லாமோபோபியாவை கனடா பொறுத்துக் கொள்ளாது என அவர் கூறியுள்ளார்.