Ads Area

சம்மாந்துறையில் சட்டவிரோத மண் ஏற்ற முற்பட்ட வாகனங்களை கைப்பற்றிய பொலிஸார்.

சம்மாந்துறை பகுதியில் உள்ள வயல்வெளி சார்ந்த ஆற்று படுக்கைகளில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்ற முற்பட்ட 6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் லொறிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழலை பயன்படுத்தி சம்மாந்துறை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல இடங்களில் சட்டவிரோதமாக வயல்வெளிகள் ஆற்றுப்படுக்கைகளில் இனந்தெரியாத நபர்கள் ஆற்று மண்களை அகழ்ந்து வருவதாக செவ்வாய்க்கிழமை காலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொறுப்பதிகாரி தலைமையிலான துர்நடத்தை தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மண் ஏற்றப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகத்தில் 6 உழவு இயந்திரங்கள் மற்றும் 4 டிப்பர் லொறிகளை மீட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட வாகனங்கள் மற்றும் சாரதிகளில் விபரங்கள் பதியப்பட்டு விசாரணை மேற்கொண்ட பின்னர் நாளை (20) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TamilWin






















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe