இலங்கையில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அவசியமா என விமர்சித்த இலங்கை அணி முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலடி கொடுத்துள்ளது.
நகர்ப்புற பகுதியில் கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடுவதற்கான கேள்விகள் அதிகரித்திருப்பதாக கிரிக்கெட் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ஹோமாகம பகுதியில் இந்த பெரிய மைதானத்தை நிர்மாணிப்பதற்கான செலவினை கிரிக்கெட் சபையே ஏற்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.