கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 144 ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் சாரைசாரையாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரிசா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்தும் சைக்கிள் மார்க்கமாகவும் பயணித்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை சென்னை போரூரில் இருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் நடந்து உணவில்லாமல் கவரப்பேட்டை பஜார் பகுதியில் வந்துள்ளார். உடலின் சோர்வு காணமாக கடை அருகே மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உணவு தண்ணீர் அளிப்பதற்காக எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் உடல் அசைவு ஏதும் இல்லாததால் அருகே இருந்த மருத்துவரை அழைத்துக் கொண்டு பொதுமக்கள் சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.