ஐ.எல்.எம் நாஸிம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4 சமூர்த்தி வங்கிகளூடாக 16937 பயனாளிகளுக்காக 87.67 மில்லியன் ரூபா நிதியை சமூர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேல் முறையீடு செய்தவர்கள் போன்றவர்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (18) சம்மாந்துறையில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நேரில் சென்று குறித்த வேலைத் திட்டத்தினை அமுல்படுத்தினர்.