Ads Area

சவுதியில் நாடு தழுவிய ரீதியில் இன்று முதல் எதிர் வரும் 27ம் திகதி வரை 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சவுதி அரேபியாவில்  நாடு தழுவிய ரீதியில் இன்று மே 23ம் திகதி முதல் எதிர் வரும் மே 27ம் திகதி வரை 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் மே 23 திகதியிலிருந்து 27ம் திகதி வரையான நாட்களுக்கு 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது இக் காலப்பகுதி ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளின் ஆரம்ப காலமாகவும் இருப்பதனால் இந் நாட்களின் பொதுமக்களின் ஒன்று கூடல்களை தவிர்க்கவும், வெளியிடங்களுக்கு பயணம் செய்வதைத் தடுக்கவுமே தற்போது இக் காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெருநாள் தொழுகையை கூட வீடுகளில் தொழுது கொள்ளும் படி சவுதி அரேபிய மார்க்க அறிஞர்களால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு நேரத்தில் உணவு மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியில் செல்ல அதிலும் அவரவர் வசிக்கும் பிரதேசங்களில் மாத்திரம் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்

சவுதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 67,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதுவரை மொத்தமாக 364 பேர் பலியாகியுள்ளதோடு 39,003 பேர் கொரோனாவால் முழுவதுமாக குணமடைந்தும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இதனோடு ஒட்டிய முந்தைய செய்தி ஒன்று வீடியோ பதிவாக.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe