கத்தாரின் வீதியொன்றில் 500 றியால்கள் நோட்டுக்களை வீசி விளையாடிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆனதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வீடியோவில் நபரொருவர் வீதிகளில் 500 றியால்கள் நோட்டுக்களை வீசி விளையாடுவது போன்று படமாக்கப்பட்டுள்ளது. மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்கான உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் - கத்தார் தமிழ்.