Ads Area

எமக்கு முஸ்லிம்களிடமிருந்து புரியாணியும் வாக்கும் கிடைக்கும் நிலை உருவாகி வருகிறது.

முஸ்லிம் சமூகத்தினரது கௌரவம் மற்றும் உரிமை ஆகியவற்றை பாதுகாக்கும் அரசாங்கத்தை தோற்றுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 30 வருட கால யுத்தம் தீவிரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல.

கொவிட் - 19 வரைஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சகோதரர்களின் உடலை எரிப்பாதா, அல்லது புதைப்பதா என்ற பிரச்சினை தோற்றம் பெற்றது. உடலை எரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. சுகாதார பிரிவினரே அந்த தீர்மானங்களை எடுத்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளனத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கடந்த காலங்களில் முஸ்லிம் தரப்பினர் நாம் எதிர்பார்த்த அளவில் ஆதரவு வழங்கவில்லை. இருப்பினும் கணிசமான தரப்பினர் ஆதரவு வழங்கினார்கள். அவர்களும் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளானார்கள். அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டோம். 

எமக்கு புரியாணி, யானைக்கு வாக்கு என்ற கதை ஒருகாலத்தில் பேசப்பட்டது. இப்போது அந்த நிலைமை படிப்படியாக குறைந்து வருகிறது. எமக்கு புரியாணியும், அதனுடன் வாக்கும் கிடைக்கிறது. முஸ்லிம் சமூகத்தினரை பிரதிநிதித்துவ்படுத்தும் 8 வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை வெற்றிப்பெற செய்வதற்கு முழுமயான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

முஸ்லிம் மக்களை பாதுகாக்கவும், அவர்களின் கௌரவத்தை பாதுகாக்கவும், விடுதலை புலிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கையினை எடுத்தோம். யுத்தம் புரிந்தது பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு மாத்திரமே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. பயங்கரவாத்துக்கு எதிராகவே போராட்டம் இடம்பெற்றது. அதனை தாண்டி ஒரு இனத்தை இலக்காக கொண்டு போர் செய்யவில்லை. தற்போது சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அதனால் எம்முடன் இணையுங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம்.


கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமைகள் யாவரும் அறிந்ததே ஐந்து வருடங்களாக அபிவிருத்தி வீழ்ச்சியடைந்தது இதனால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் முரண்பட்டுக் கொண்டமையினால் முழு அரசாங்கமும் பலவீனமடைந்தது. இவ்வாறான நிலை மீண்டும் தோற்றம் பெற கூடாது. நாட்டின் ஜனாதிபதியின் கொள்கையை செயற்படுத்த பிரதமர், அமைச்சரவை தயாராக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் கொவிட்- 19 வைரஸ் தொற்று தாக்கம் செலுத்தியது அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த கடன் பெறும் எல்லை பிரேரணையை தோற்கடிக்க எதிர்தரப்பினர் தயாராக இருந்தனர். இவ்வாறான நிலையில் நாட்டின் அபிவிருத்தி தடைப்படும். ஆகவே இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச நிர்வாகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கினார். வைரஸ் பரவல் காரணமாக உரிய காலத்தில் பொதுத்தேர்தலை நடத்த முடியாமல் போனது. மக்களின் பாதுகாப்பினை கருத்திந் கொண்டே கொவிட்- 19 வரைஸ் பரலவை கட்டுப்படுத்தும் பணியில் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.


சுகாதார தரப்பினரால் மாத்திரம் இதனை வெற்றிக் கொளள் முடியாது. அவ்வாறான நிலையில் உயிரிழந்த முஸ்லிம் சகோதரர்களின் உடலை அடக்கம் செய்வதா, அல்லது எரிப்பதா என்ற சிக்கல் நிலை ஏற்பட்டது. உடல்களை எரிக்கும் தீர்மானத்தை நாங்கள் எடுக்கவில்லை. சுகாதார விசேட நிபுணர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எந்த ஒரு விடயத்திற்கு எதிராக பிறிதொரு கருத்து இருப்பது இயல்பானதே என்றார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe