குவைத்தில் சல்வா பிரதேசத்தில் இலங்கை நாட்டவரால் இயக்கப்பட்டு வந்த மதுபான உற்பத்தி நிலையத்தை குவைத் பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு இருந்த 39 மதுபான பீப்பாய்களை கைப்பற்றியதோடு, அதனை நடாத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
குவைத்தில் இரவு நேரப் பணியில் இருந்த காவலர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பை ஒன்றுடன் சென்ற ஒருவரை விசாரிக்கச் சென்ற போது குறித்த நபர் தனது கையிலிருந்த பையினை வீசிவிட்டு ஓடிச் சென்றுள்ளார் அவரைப் பின்தொடர்ந்த காவலர் அவரது இருப்பிடத்திற்கு நுழைந்த போது அங்கு மதுபான உற்பத்தி நிலையம் இயங்குவதை கண்டுபிடித்துள்ளார்.
அங்கு சுமார் 39 மதுபான பீப்பாய்களுடன் மதுபான உற்பத்தி நிலையத்தினை நடாத்தி வந்த குறித்த இலங்கையைச் சேர்ந்தவரை தற்போது குவைத் பொலிஸாரால் கைது செய்துள்ளர்.
செய்தி மூலம் - https://www.arabtimesonline.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.