த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
கொழும்பு One Galleface - PVR திரையரங்கில் நேற்று (28) பிற்பகல் இத்திரைப்படம்
திரையிடப்பட்டது. சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவான “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, ரவிந்திர குருகே மற்றும் எச்.டி.பிரேமசிறி ஆகியோர் ஆவர்.
கொவிட் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சுகாதார ஊழியர் குழுவினர், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி ஒருமுறை இத்திரைப்படத்தை இலவசமாக பார்வையிட முடியும்.