Ads Area

கல்முனை சொர்ணம் நகை மாளிகைக்கு விஜயம் செய்த கருணா.

பாறுக் ஷிஹான்

தமிழர் மகா சபை  சார்பில்  பாராளுமன்ற  வேட்பாளராக போட்டியிடும்   தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை (28) முற்பகல்  அம்பாறை மாவட்டம்   கல்முனை மாநகரில் அமைந்துள்ள பிரபல சொர்ணம் நகை மாளிகைக்கு விஜயம் செய்தார்.

சமூக நேயப் பணியினை அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் சொர்ணம் குழுமத்தின் அழைப்பினை ஏற்று அங்கு சென்ற அவரை அக்குழுமத்தின் பொறுப்பாளர் சுந்தர் உட்பட ஊழியர்கள் வரவேற்றனர்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான்

மாற்றம் ஒன்றினை அம்பாறை மாவட்டத்தில் நாம் ஏற்படுத்த வேண்டும்.கடந்த காலங்களில் எமது மக்களை பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றியவர்கள் உரிமை என்ற பெயரில் ஏமாற்றியதை மக்கள் அறிவார்கள்.எனவே சகல மக்களும் இணைந்து புதிய மாற்று தலைமை ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் சொர்ணம் குழுமமானது அம்பாறை மாவட்டத்தில் பிரபல நகை மாளிகைகளை கொண்டமைந்துள்ளதுடன் பரந்து பட்ட வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe