(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை நகர மண்டபம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு விட கல்முனை மாநகர சபை மாதந்த சபை அமர்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை நகர மண்டபத்தை மக்கள் பொது பாவனைக்கு விடுக்கவும் மாநகரசபை அமர்வுகளை முன்னர் இடம்பெற்ற இடத்தில் நடாத்தப்பட வேண்டுமென மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.ரோஷன் அக்தர் அவர்களினால் மாநகர சபை மாதாந்த அமர்வில் கோரிக்கையையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.
கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் தலைமையில் கல்முனை நகர மண்டபத்தில் (29) இடம்பெற்றது.
கல்முனை பகுதியில் பொது மக்களுக்காக நிகழ்வுகளை மற்றும் கூட்டங்களை கலாச்சார நிகழ்வுகளை நடாத்த பொதுமக்கள் பல்வேறு அசெளகரியமான நிலையில் உள்ளனர்.
கல்முனை மாநகரசபை கட்டிடமானது புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள நிலையில் கல்முனை மாநகர மாதாந்த சபை அமர்வு நகர மண்டபத்தில் மாற்றப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இதனை பொதுமக்கள் பாவனைக்கு இந்த நகர் மண்டபத்தை திறந்து விடுவது பற்றிய சிக்கல்கள் காணப்பட்டது தற்போது கல்முனை மாநகர சபை புதிய கட்டிடத்திற்கான நிர்மாணத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் சரியான தீர்மானம் இல்லாமல் உள்ள நிலையில் குறிப்பாக ஒரு மாதத்தில் ஒரு தடவை கூட்டப்படுகின்ற மாதாந்த அமர்வுகளில் இவ் நகர மண்டபத்தை பயன்படுவதில் இருக்கின்ற சாதக பாதக விடயங்களை இச் சபையில் கருதிற்கொள்ள வேண்டியுள்ளது .
ஏனென்றால் இவ் நகர மண்டபம் ஆரம்பத்தில் நிர்மாணிக்கபட்ட பின் இதில் பல கலாச்சார நிகழ்வுகள் ,ஏனைய பொது நிகழ்வுகள் எல்லாம் இவ் மண்டபத்தில் இடம் பெற்று வந்த நிலையில் பின்னர் மாநகர சபையினால் தனியார் நிறுவனமொன்றுக்கு வாடகைக்கு விடப் பட்ட பின்னர் பொது மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது அதன் பின்னர் குறித்த தனியார் நிறுவனத்திக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட இவ் கட்டிடத்தின் ஒப்பந்தம் மாநகர சபையினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று தனியார் மண்டபங்களில் நிகழ்வுகள் இடம்பெற அதிக வாடகை காணப்படுகின்றது எமது பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நலன் கருதி எமது சபை ஒன்றுகூடலை முன்னர் இடம்பெற்ற இடத்தில் நடாத்துவதன் மூலம் பொது மக்களின் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் மக்கள் பாவனைக்கு நகர மண்டபத்தினை திறந்து வைக்க வேண்டுமென முக்கிய கோரிக்கையை முன் வைகிறேன் என்றார் .
மேலும் இதன் போது இக் கோரிக்கைக்கு ஆதரவாக ஏ.ஆர்.எம்.அஸீம் அவர்களும் இதனை பொது மக்கள் பாவனைக்கு விடும் படி சபையில் உரையாற்றினார் .