Ads Area

கல்முனை இக்பால் சனசமூக நிலையம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸின் வெற்றிக்காக முழுமையான ஆதரவு.

நூருல் ஹுதா உமர்

கல்முனையில் சுமார் 52 வருடகால வரலாற்றினைக்கொண்ட பழம்பெரும் சமூக அமைப்பான இக்பால் சனசமூக நிலையம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களை முழுமையாக ஆதரித்து கல்முனை மக்களின் ஏக பிரதிநிதியாக மீண்டும் தெரிவு செய்வதற்கு தனது ஆதரவினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இது சம்மந்தமான முக்கிய சந்திப்பு திங்கட்கிழமை  இக்பால சனசமூக நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எல்.மீராசாய்வு(மீராஹாஜி) தலைமையில் இக்பால் சனசமூக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுடனான சந்திப்பின் போது இவ்வறித்தலை வெளியிட்டனர்.


இக்பால் சனசமூக நிலையமானது மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எம்.எம் அஸ்ரப் அவர்களின் வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதன் பின்னர் இன்று முதல் முதலாக இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் வெற்றிக்காக வெளிப்படையாக தனது முழுமையான ஆதரவினை தெரிவிக்க முன்வந்து இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் இக்பால சன சமூக நிலையத்தின் உயர்மட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe