Ads Area

குவைத்தில் தற்கொலைகள் அதிகரிப்பு கடந்த 4 மாதங்களில் 40 பேர் தற்கொலை.

குவைத்தில் கடந்த பிப்ரவரி பிற்பகுதியில் இருந்து நாற்பது தற்கொலை வழக்குகள் மற்றும் 15 தோல்வியுற்ற தற்கொலை முயற்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அல் கபாஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக தங்கள் முதலாளிகள் பணம் செலுத்துவதை நிறுத்திய பின்னர் தற்கொலை செய்து கொண்டவர்கள் கடுமையான நிதி சூழ்நிலைகள் காரணமாக உளவியல் மற்றும் பொருளாதார துயரங்களை அனுபவித்ததாக பெரும்பாலான வழக்குகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குவைத்தில் ஒரு  வெளிநாட்டவர் தனது மனைவியுடன் சமூக வலைத்தளம் ஒன்றின் ஊடாக அரட்டையில் ஈடுபட்டிருக்கும் போது தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

புனித ரமழான் மாதத்தில் வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட மூன்று தற்கொலை வழக்குகளை குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் அதில் உகாண்டா, எகிப்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவைத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடி தொடங்கியதில் இருந்து தற்கொலை வழக்குகள் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளன என குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன. குவைத்தில் ஆண்டுதோறும் 70 முதல் 80 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. 

குவைத்தில் தற்கொலை செய்து கொண்ட வெளிநாட்டவர்களின் உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரனைகளில் நாட்டில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடி, கடன் தொல்லை போன்ற காரணங்களினால் மன அழுத்தத்திற்கு ஆளாகியே குவைத்தில் சில வெளிநாட்டினர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

மேலதிக விபரம் - https://www.timeskuwait.com

மேலதிக விபரம் - https://gulfnews.com






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe