சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இரண்டாவது பொதுமன்னிப்பு வழங்கப்படவிருப்பதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன.
மீதமுள்ள 96,000 பேருக்கும் கொரோனா மூன்றாம் கட்ட நடவடிக்கையின் பின்னர் வதிவிட மீறல் மற்றும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கான அபராதம் ஏதும் செலுத்தாமல் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான பொதுமன்னிப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களில் 50 விகிதமானவர்கள் வெளியேறும் நடவடிக்கை என கூறியுள்ளார்.
Source : Arabtimes