Ads Area

குவைத்தில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் ஒருவரின் உடல்.

குவைத்தின் Zahra பகுதியில் உள்ள மசூதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் நேற்று (29/06/20) சிதைந்த நிலையில் இந்தியர் (வயது-37) உடல் இருப்பதை பார்த்த ஒருவர் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு அறைக்கு(அவசரகால உதவி பிரிவுக்கு) அழைப்பு மூலம் தகவல் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த இடம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கில் இருந்து குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த சில நாட்களில் இந்த இடம் பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் திறக்கப்பட்டது.


இதையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சிதைந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முதல்கட்டத்தில் விசாரணை அடிப்படையில் சந்தேகத்திற்குரியதாக வழக்குக பதிவு செய்யபட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. 


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe