கம்போடியாவின் புனோம் பென்னில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே இருந்த குளத்தில் ஆடையின்றி குளித்துள்ளார். அப்போது அவர் ஆணுறுப்பு காயமடைந்து ரத்தம் வந்துள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்த முதியவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் என்று மிரர் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அட்டை பூச்சி 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சியதால் அதனை வெளியேற்ற மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ஒரு நாள் முழுவதும் முதியவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின் அவர் குணமடைந்து உள்ளார்.