கத்தாரில் வாகன ஓட்டுநர்களாக பணிபுரிவோருக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றை உள்துறை அமைச்சு விடுத்துள்ளது. கத்தாரில் பொது இடங்களில் அங்காங்கு விசேட தேவையுடையவர்களுக்கான பார்க்கிங் வசதிகளை கத்தார் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பார்க்கிங்களில், ஏனைய பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்து மீறல் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் உள்துறை அமைச்சு இந்த தகவலை தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கம் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thanks - Qatar Tamil.
Thanks - Qatar Tamil.