சவுதி அரேபியா ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதரகமானது வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து 06 ஜூலை 2020 அன்று 275 இலங்கையர்களை ரியாத் நகரிலிருந்து கொழும்பு நோக்கி மீள்திருப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.
இவ்விஷேட விமானமானது கற்பினித் தாய்மார்கள், அவசரமாக அனுப்பி வைக்கப்பட வேண்டிய நோயாளிகள், மாணவர்கள், நாடுகடத்தல் முகாமில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள், இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கில் எமது தூதரகத்தில் பதிவு செய்திருந்த அண்மையில் தங்களது தொழில்களைத் துறந்த வயது முதிரந்த புலம்பெயர் தொழிலாளிகள் ஆகியோரை பயணிகளாகக் கொண்டிருந்தது.
தகவல் - இலங்கைத் துாதரகம்
றியாத் நகரம் - சவுதி அரேபியா.