Ads Area

சம்மாந்துறையின் துடிப்புள்ள அரசியல்வாதி மறைந்த அன்வர் இஸ்மாயில் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்.

எம் . எம் . இஸ்மாயில் மாஸ்டருக்கும் சுபைதா உம்மாவுக்கும் ஒரேயொரு ஆண்மகன் 1967 . 07 . 16 இல் பிறந்தவர் றிஸ்லீன் எனும் அன்வர் இஸ்மாயில் . இவர் தனது ஆரம்பக் கல்வியை தாறுல் உலூம் வித்தியாலயத்திலும் பின் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்திற்கு தெரிவானார் . பாடசாலையில் பயிலும் காலத்திலேயே சமூக சேவையில் அக்கறை செலுத்தினார் 'முஸா ' இவரது முக்கியமான சமூக சேவை அமைப்பாகும் . சட்டத்தரணியான பின் எம் . எச் . எம் . அஷ்ரஃப் அவர்களின் பாராளுமன்ற இணைப்புச் செயலாளராக செயற்பட்டார் .

பின்னர் தலைவர் காலம் சென்ற பின் நடைபெற்ற 2001 டிசம்பர் மாதத் தேர்தலில் யூ . எல் . எம் . முகைதீன் தேசிய ஐக்கிய முன்னணியில் சேர்ந்தமையினால் சம்மாந்துறைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒருவர் தெரிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது . அப்போது எம் . ஐ . எம் . மன்சூரும் எம் . ஐ . அன்வர் இஸ்மயிலும் கோரிய போதும் எம் . ஐ . அன்வர் இஸ்மாயில் SLMC சார்பாக போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டார் . அத்தேர்தலில் SLMC சார்பாக ஏ . எல் . எம் . அதாவுல்லா,எச் . எம் . எம் . ஹாகஸ் , எம் . ஐ . அன்வர் இஸ்மாயில் ஆகியோர் ஆசனங்சனங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதில் அன்வர் இஸ்மாயில் சம்மாந்துறைத் தொகுதிக்குத் தெரிவு செய்யப்பட்டார் இக்காலப் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஜனாதிபதியாக இருந்தார் . ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது . அப்போது அதாவுல்லா முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளி யேறிய பின் ஹரீஸ் , அன்வர் இஸ்மாயில் ஆகிய இருவரும் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தனர் . இந்நடவடிக்கைகள் முஸ்லிம் காங்கிரசைப் பிளவுபடுத்திய செயலாக இருந்தது . ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது . அப்போது எமதுரைச் சேர்ந்த ஏ . எம் . எம் . நெளசாட் அவர்கள் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்கிறார் . இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது . இத்தேர்தலில் அன்வர் இஸ்மாயில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பக்கம் நின்றாலும் தேர்தலில் போட்டியிடாது அதன் வெற்றிக்குப் பாடுபட்டார் . இதனால் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஐ . ம . சு . மு அன்வர் இஸ்மாயிலுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வழங்கி நீர்ப்பாசன அமைச்சராகவும் நியமித்தது . இது சம்மாந்துறை இழந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை நிவர்த்தி செய்ய பெரு உதவியாக இருந்தது.

இத்தேர்தலில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ . எம் . எம் . நெளசாட் எம் . ஐ . எம் . மன்சூர் ஆகியோர் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட போதிலும் யாரும் தெரிவு செய்யப் படவில்லை . இது மிகப் பெரும் துரதிர்ஷ்ட மாகும் . என்றாலும் எம் . ஐ . அன்வர் இஸ்மாயில் அவர்கள் 14 . 09 . 2007ஆம் திகதி வபாத்தாகும் வரை இவ்வூரின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் . அத்துடன் அன்றைய பயங்கரவாதம் , இன முரண்பாடுகள் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் இவர் ஊரின் தலைமைத்துவத்தை ஏற்றும் பாதுகாத்தமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய அம்சமாகும் . இவரது காலத்தில் நெல்லுப்பிடி ஆற்றுச் சந்தியில் நீண்ட காலமாகப் பிரதேச சபைக்குச் சொந்தமாக இருந்து வந்த இடத்தில் ஜம்மியத்துல் உலாமாவுக்காக ஒரு கட்டிடத்தைக் கட்டினார் . இதன் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட மஸ்ஜிதுல் அன்வர் அப்பிரதேச மக்களுக்கும் பிரயாணிகளுக்கும் பெரிதும் பயன்பாடுடையதாக இருந்தது . மேலும் இதில் சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை தமது கூட்டங்களை நடத்து வதுடன் நூலகமாகவும் சன்மார்க்க மையமாகவும் பயன்படுத்துகின்றது . அன்வர் இஸ்மாயிலின் மறைவிற்குப் பின்னர் இக்கட்டிடத்தினைப் பூரணப்படுத்துவதில் ஏ . எல் . , எம் அதாவுல்லா , மாகாண சபை உறுப்பினர் எம் . எல் . அமீர் ஆகியோர் பெரிதும் பங்களிப்புச் செய்தனர் . இச்சந்தியில் சம்மாந்துறைக்கான வரவேற்பு வளைவு ஒன்றையும் நிறுவினார் . மேலும் சம்மாந்துறைப் பிரிவுக்கென நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகம் ஒன்றை ஸ்தாபித்து இப்பிரதேச மக்களுக்குப் பெரும் பணி செய்தார்.கல்லோயா ஆற்றுக்குப் பாலம் அமைத்ததுடன் வேறு சிறு பாலங்களும் அமைத்து சம்மாந்துறை குடுவில் வீதியை நெய்னாகாடு ஊடாக விஸ்தரிப்புச் செய்தார் . ஹிஜ்ரா சந்தைக் கட்டிடத்தொகுதி , செந்நெல் கிராம குடிநீர் திட்டம் , பல பாடசாலைக் கட்டிடங்கள் , ஜனாதிபதி விளையாட்டு மைதானத் தொகுதி , கிராமிய தொழிற்பயிற்சி நிலையம் முதலானவற்றை அமைத்துச்சம்மாந்துறையின் அபிவிருத்தி வரலாற்றில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் . எதிர்பாராதவிதமாக 2007 . 09 . 14இல் அவர் காலமானார் .

நூல் - சம்மாந்துறை  வரலாறும் வாழ்வியலும்
பக்கம் 138-140
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe