சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் உள்ள மற்றும் சவுதியிலிருந்து வெளியேறிய பலர் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி “ ஒருவர் சவுதியிலிருந்து வெக்கேசன் சென்று அவர் மீண்டும் சவுதிக்கு வராமல் விட்டால் அவரது நிலையென்ன..?? அவர் மீண்டும் சவுதிக்கு புதிய விசாவில் வரலாமா..?? எவ்வளவு காலத்திற்குல் அவரால் மீண்டும் வர முடியும்...?? என பலரும் கேட்கின்றனர். வாருங்கள் இது தொடர்பான பூரண விளக்கத்தை பார்க்கலாம்.
பொதுவாக ஒருவர் விடுமுறை செல்லும் போது அவருக்கு அவரது வெக்கேசன் காலத்தைப் பொறுத்து 1 மாதம், 3 மாதம், 6 மாதம், 2 மாதம் என்ற கணக்கில் ரி-என்றி (re-entry visas) வழங்கப்படும் ஒருவர் குறிப்பிட்ட இந்தக் காலங்களுக்குல் மீண்டும் சவுதிக்கு வந்து விட வேண்டும் வர முடியாத பட்சத்தில் 3 வருடங்களுக்கு சவுதிக்குல் நுழைய முடியாது. அத்தியாவசியத் தேவை போன்ற காரணங்களுக்காக உங்களால் குறிப்பிட்ட விசாக்காலத்திற்குல் சவுதிக்கு வர முடியாது விட்டால் உங்களது ரி-என்றி (re-entry visas) விசாக்களை நீங்கள் வேலை செய்த கம்பனியை அல்லது கபீலை அனுகி நீங்கள் மேலும் நீடித்துக் கொள்ள முடியும்.
மேலும் ஒருவருக்கு வெக்கேசனுக்குரிய ரி-என்றி (re-entry visas) விசா வழங்கப்பட்டால் அதனை அவரால் ரத்துச் செய்ய முடியாது இருப்பினும் தேவையான கட்டணத்தை மீண்டும் செலுத்திய பின்னர் புதிய விசாவினைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதே சமயம் ஒருவர் சவுதியிலிருந்து பைனல் எக்சிட் (Final Exit) சென்றால் அவரால் புதிய விசாவில், புதிய கொம்பனிக்கு எந் நேரத்திலும் மீண்டும் சவுதிக்கு வரலாம் அதற்கு அவருக்கு எந்தத் தடையும் கிடையாது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். ஒருவருக்கு பைனல் எக்சிட் (Final Exit) அடித்தவுடன் அவர் உடனே சவுதியினை விட்டு வெளியேறி விட வேண்டும் அவ்வாறு அவர் வெளியேறாது விட்டால் மீண்டும் பைனல் எக்சிட் (Final Exit) விசாவினை அவர் பெற்றுக் கொள்ள 1000 ரியால்கள் தண்டப் பணம் செலுத்த வேண்டும்.