Ads Area

சவுதி ரியாத் நகரில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் மரணம்.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் கடந்த வியாழன்  (2020/07/16) அன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாகனங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் அதேபோல விபத்துக்குள்ளான மற்றொரு காரில் பயணித்த இளைஞர் ஒருவருமாக மொத்தமாக 7  உயிரிழந்துள்ளார். 

Red Crescent Committee citied Saudi Arabia  யின் தரவுகளின்படி சவுதி அரேபியாவில் வருடமொன்றுக்கு 526000 சாலை விபத்துகள் இடம் பெறுவதாகவும் சாலை விபத்துகளுக்கு மட்டும் சவூதியில் ஆண்டுக்கு மொத்தம் 21 பில்லியன் சவுதி ரியால்கள் செலவிடப்படுவதாகவும் சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் சாலை விபத்துக்களினால் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளது. அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.” என்று அல் ஷைகா கூறினார்.

செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழ் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe