தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (05.07.2020) புதிதாக 3,580 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 209,509 ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இதுவரை சவூதியில் 1,916 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மரணித்துள்ளார்கள் இன்றும் மட்டும் 58 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
மேலும் 145,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இன்று மட்டும் 1,980 பேர் குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கடந்த வாரமாக தொடர்ச்சியாக 50 க்கு மேற்பட்டோர் நாளொன்றுக்கு கொரோனாவினால் மரணமடைந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.