Ads Area

கொரோனாவுக்கு முன்னர் சவுதியிலிருந்து விடுமுறையில் சென்றவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி.

சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகமானது அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் காலாவதியான ரெசிடென்ஸ் பெர்மிட் (Iqama) மற்றும் வெளிநாட்டினரின் Exit and Re-entry விசாக்களை மூன்று மாதங்கள் இலவசமாக நீட்டிப்பு செய்வதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இதே போன்று காலாவதியான விசா வைத்திருந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசமாக விசா நீட்டிக்கப்படும் என அறிவித்து அவர்கள் அனைவரின் விசாக்காலமும் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் இகாமா (Iqama) மற்றும் விசிட் விசா போன்றவை விமானப்போக்குவரத்து தடை ஏற்பட்ட காலங்களில் காலாவதியாகி இருந்தால், அவை இலவசமாக மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது வெளிநாடுகளில் இருக்கும் சவூதி குடியிருப்பாளர்களின் காலாவதியான இகாமா மற்றும் Exit and Re-entry விசாக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், நாட்டினுள் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இறுதி Exit visa (Final Exit visa), Exit and Re-entry visa போன்ற விசாக்கள் வழங்கப்பட்டு, கொரோனாவின் பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடையின் காரணமாக பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களின் விசாக்களும் எவ்வித கட்டணமும் இன்றி மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள், வணிகங்கள், தனியார் துறை மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தாக்கத்தினை சரிசெய்யும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
தமிழ் - khaleej tamil (www.khaleejtamil.com)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe