நிந்தவூர் இராட்சத மீன் நான்காம் பிரிவுக்குட்பட்ட பிரதேச கடலில் 06-07-2020 இன்றுக் காலை கரைவலை சிக்கிய இராட்சத சுறா இன மீன். இம்மீன் சுமார் 15அடி, நீளமும், 2 டன், இடையும் கொண்டதாகவும் கரைவலை மீனவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இம்மீனின் பெயர் "கொடுப்புளி சுறா"இன மீன் என்றும் கரை வலையை இழுத்து கரைக்கு கிட்டத்தட்ட வரும் முன்பேதான் இம்மீனைக் மீனவர்கள் கண்டதாகவும் வலையில் சிக்கியதால் மீனவர்களால் இழுக்க முடியாமல் உழவு இயந்திரத்தின் உதவியைக் கொண்டு கட்டி இழுத்த போது கடல் தொழில் மீன்பிடி அதிகார சபை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து அம்மீனை வலையில் இருந்து கழட்டி மீண்டு கடலில் விடுமாறு உத்தரவிட்டனர்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.