கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) தனது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தங்கள் வங்கி அட்டை முடக்கப்பட்டுள்ளதாக கூறி வரும் மோசடி குறுந்தகவல்களை புறக்கணிக்குமாறு எச்சரித்துள்ளது.
மேலும், அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்று வரும் குறுந்தகவலை உடனடியாக குற்றவியல் புலனாய்வு பொது இயக்குநரகத்தின் பொருளாதார மற்றும் சைபர் குற்றவியல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு வங்கி அட்டைகள் முடக்கப்பட்டுள்ளதாக வரும் குறுந்தகவல்களை நம்பி அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பாக கேட்கும் தகவல்களை நீங்கள் வழங்கினால் அதன் மூலம் அவர்கள் உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தினை மோசடி செய்யலாம் ஆகவே இவ்வாறு உங்கள் தொலைபேசிக்கு வரும் குறுந்தகவல்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.