சவுதி அரேபியாவின் நோய்த்தடுப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு சுகாதார ஆணையகம் இவ்வாண்டு புனித ஹஜ் கடமையின் போது பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
புதிய சுகாதார நெறிமுறைகளின் படி ஹஜ் கடமைக்கு அனுமதிக்கப்படும் யாத்திகர்களுக்கு புனித கஃபாவை தொடுவதற்கோ அல்லது முத்தமிடுவதற்கே அனுமதியில்லை அதே போல் கஃபாவை தவாப் செய்யும் போது ஒன்றரை மீட்டர் தூரம் வரை சமூக இடைவெளியைப் பேண வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஹஜ் கடமையின் போது யாத்திரிகர்கள் யாருக்கேனும் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு அதன் பிறகுதான் எஞ்சிய கடமைகளை நிறைவேற்ற அவர் அனுமதிக்கப்படுவார்.
ஹஜ் கடமையின் போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் புனித ஸம் ஸம் நீரினை குறிப்பிட்ட அளவில் மாத்திரம் தனித்தனியாக பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புனித மக்காவில் ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் ஸம்ஸம் நீர் குளிர்சாதனப் பெட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதோடு, அதில் 1,900இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும், இம் முறை புனித ஹஜ் கடமைக்கு சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் சவுதி நாட்டவர்கள் என குறிப்பிட்ட ஒரு தொகையினருக்கு மாத்திரமே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.